பதின்மூன்றாவது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது.
குறித்த மாநாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டினை சுவிட்சர்லாந்து அதிபர் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் போர் நிறுத்தம்! ஹமாஸை வலியுறுத்தும் அமெரிக்கா
தமிழ் தொழிலதிபர்கள்
இந்த நிலையில் 13 ஆவது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டமானது லண்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் அண்மையில் இடம்பெற்றது.
மேற்படி இந்த ஆலோசனை கூட்டமானது லண்டனில் கடந்த 20 ஆம் திகதியும் மற்றும் சுவிட்சர்லாந்தில் 27 திகதியும் நடைபெற்றிருந்தது.
மட்டக்களப்பில் சாணக்கியன் பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் பிரத்தியேக சந்திப்பு
ஆலோசனைக்கூட்டம்
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் லண்டனில் இருந்தும் சுவிட்சர்லாந்தில் இருந்தும் ஏனைய பல நாடுகளில் இருந்தும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் நடைபெறவுள்ள மாநாட்டில் 40 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
