Home இலங்கை கனடாவில் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னம்!

கனடாவில் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னம்!

0

கனடாவின் பிராம்ப்டன்(Brampton) நகரில் இலங்கையின் தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்கும் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கான இறுதி வடிவமைப்பு இந்த ஆண்டின்(2024) தொடக்கத்தில் பிராம்ப்டன் நகர சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

அத்தோடு இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து தகர்க்கப்பட்டதன் பின்னரே பிராம்ப்டனில் நினைவுச்சின்னம் கட்டப்பட்டது.

இலங்கை மீது அமெரிக்க இராஜாங்க திணைக்களம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

நினைவுச்சின்னம்

இந்நிலையில் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுச்சின்னம் பற்றிய செய்தி இலங்கை அதிகாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்தே இலங்கையின் “தீவிர கவலையை” தெரிவிக்க கொழும்பில் உள்ள ஒட்டாவாவின் தூதுவரை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) வரவழைத்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

காசாவில் நூற்றுக்கணக்கான உடல்களைக் கொண்ட புதைகுழிகள்: அச்சத்தில் ஐ.நா

வெளியுறவு அமைச்சு

இதன்போது, முன்மொழியப்பட்ட நினைவுச்சின்னம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு தனது “வலுவான கவலையை” வெளிப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில் மே 18 அன்று தமிழர்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபரின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – மூடப்படும் வீதிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version