Home உலகம் ஒபாமாவுடன் விவாகரத்து : மிச்செல் ஒபாமா வெளியிட்ட அறிவிப்பு

ஒபாமாவுடன் விவாகரத்து : மிச்செல் ஒபாமா வெளியிட்ட அறிவிப்பு

0

ஒபாமாவுடன் விவாகரத்து என பரவி வரும் செய்திகளுக்கு மிச்செல் ஒபாமா தகுந்த பதிலை அளித்துள்ளார். 

இது குறித்து பேசிய மிச்செல் ஒபாமா, “எங்களுக்கு 60 வயது ஆகிறது. என் கணவருடன் நான் வெளியில் செல்வதை மக்கள் பார்க்காததால், எங்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக வதந்திகள் பரவுகின்றன. எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், நாங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதில்லை.

வதந்திகளுக்கு என்ன காரணம்

இறுதிச் சடங்குகள், பதவியேற்பு விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று நான் முடிவெடுத்தேன். இந்த விஷயங்களில் இருந்து நான் விலகி இருக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தது தான் வதந்திகளுக்கு காரணமாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் அரசு இறுதிச் சடங்கில் ஒபாமாவுடன் மிச்செல் வரவில்லை. மேலும் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி நடக்கும் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்கும் விழாவிலும் ஒபாமாவுடன் மிச்செல் கலந்துகொள்ளவில்லை.

இதன் விளைவாகவே விவாகரத்து வதந்திகள் வலுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version