Home உலகம் சர்வதேச ரீதியில் முடங்கிய தகவல் தொழில்நுட்பம் : செயலிழந்த மைக்ரோசொப்ட் கட்டமைப்பு

சர்வதேச ரீதியில் முடங்கிய தகவல் தொழில்நுட்பம் : செயலிழந்த மைக்ரோசொப்ட் கட்டமைப்பு

0

சர்வதேச ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக பல நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை

அத்தோடு, பிரித்தானியாவின் சில ஊடகங்கள் செயலிழந்துள்ளதுடன் லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அவுஸ்திரேலியாவின் தொலைத்தொடர்புகள் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  மற்றும் இந்த நிலைமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிலைமையைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version