Home உலகம் ஈரான்-அமெரிக்காவின் கடும் மோதல்: பதிலடி அச்சத்தால் பதற்றத்தில் உலகம்

ஈரான்-அமெரிக்காவின் கடும் மோதல்: பதிலடி அச்சத்தால் பதற்றத்தில் உலகம்

0

அமெரிக்கா, ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளதையடுத்து மத்தியகிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

குறித்த தாக்குதல் ஈரானின் ஃபோர்டோ, நத்தன்ஸ் மற்றும் ஈஸ்பஹான் ஆகிய அணுசக்தி தளங்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலின் மூலம், ஈரானின் அணுசக்தி திறனில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தாக்குதலின் பின்னர் உலக நாடுகள், அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்புகளை விடுத்துள்ளன.

இதனைடிப்படையில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஜெனிவாவில் ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முயன்றுள்ளனர்.

இருப்பினும், ஈரான் அமெரிக்காவின் இந்த தாக்குதலை எதிர்த்து அமெரிக்காவின் படையெடுப்புக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த பதிலடி நடவடிக்கைகள், மத்தியகிழக்கில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகின்ற நிலைமையில், உலக நாடுகள் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு உடன்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றன.

இதனடிப்படையில், இதன் விரிவான பிண்ணனி, அடுத்த கட்ட சர்வதேச அரசியல் நகர்வுஈ மோதலின் பின்விளைவு மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் கனடா அரசியல் ஆய்வாளர் நேர குணரட்னம் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி, 

https://www.youtube.com/embed/KxZnw7WdmHw

NO COMMENTS

Exit mobile version