Home இலங்கை அரசியல் துயிலும் இல்ல காணிகளை விட்டு வெளியேறவுள்ள இராணுவம் : ஆளும் தரப்பு தெரிவிப்பு

துயிலும் இல்ல காணிகளை விட்டு வெளியேறவுள்ள இராணுவம் : ஆளும் தரப்பு தெரிவிப்பு

0

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் இதற்கு அமைவாக மிக விரைவாக இராணுவம் நிலை கொண்டுள்ள துயிலும் இல்ல காணிகளை விட்டு வெளியேற உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சலி செலுத்துவதற்கான முழு உரிமை

மேலும் தெரிவிக்கையில், இதை நான் சொல்லவில்லை. ஜனாதிபதி
அநுர குமார திசாநாயக்க தெரிவித்த விடயமே.

மாவீரர்களை நினைவு
கூறுவதற்கான உரிமை நூற்றுக்கு நூறு அந்த மக்களுக்கு உள்ளது.

தற்போதைய அரசாங்கமானது தமிழ் மக்களின் பல காணிகளை விடுவித்து வரும் நிலையில்
துயிலும் இல்லங்களில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரையும் முற்று முழுதாக
அந்தப் பகுதியில் இருந்து விடுவித்து மக்களை அவர்களின் உறவுகளுக்கு அஞ்சலி
செலுத்துவதற்கான முழு உரிமையையும் வழங்கும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார பாதுகாப்புச் செயலாளருக்கு  காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு அமைவாகமிக விரைவாக
இராணுவம் நிலை கொண்டுள்ள துயிலும் இல்ல காணிகளை விட்டு வெளியேற
உள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version