Home இந்தியா தனது சரும பளபளப்பின் இரகசியத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

தனது சரும பளபளப்பின் இரகசியத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

0

மில்லியன் கணக்கான இந்தியர்களின் அன்பும், ஆசியும், 25 ஆண்டுகால பொது சேவையின் பிரதிபலிப்பே தனது சரும பளபளப்புக்கு காரணம் என இந்தியப் பிரதமர் நரேந்திடி மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மகளிர் அணி உலக கோப்பையை வென்றதை அடுத்து அவ்வணியுடனான சந்திப்பின்போது ‘உங்களது சருமமம் எப்போதும் பளபளப்பாக உள்ளது..? உங்களின் சரும பராமரிப்பு குறித்து கூற முடியுமா..? என கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் தியோல் கேட்டதற்கு, மோடி இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

அறை முழுவதும் சிரிப்பொலி

 இந்த கேள்வியை கேட்டதும் அறை முழுவதும் சிரிப்பொலி எழுந்தது.

நான் இதைப்பற்றி அதிகம் யோசித்ததில்லை” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதன்போது சகலதுறை வீரரான சினே ராணா “தனது நாட்டு மக்களின் அன்புதான் பிரதமரை பிரகாசிக்க வைக்கிறது” என்று கூறியபோது, “நிச்சயமாக அதுதான். இது ஒரு பெரிய பலம். நான் அரசாங்கத்தில் பல ஆண்டுகள் செலவிட்டேன்.” என்று பிரதமர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறினார்: “இவை அனைத்தையும் மீறி, ஆசீர்வாதங்கள் தொடர்ந்து வருகின்றன, அது இறுதியில் உங்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version