கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு வீதத்தை பாதுகாப்பு செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யுமாறு நேட்டோ அமைப்பு (NATO) கோரியுள்ளது.
அதன்படி, கனடாவின் (Canada) பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்கப்படும் என்று கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் (Bill Blair) குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இரு தசாப்தங்கள் பூர்த்தியாகும் முன்னரே நேட்டோ அமைப்பின் ஆலோசனைகளுக்கு அமைய பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு உற்பத்தி
எதிர்வரும் 2029 வருடமளவில் கனடாவின் மொத்த பாதுகாப்புச் செலவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.75 வீதமாக அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், கனேடிய அரசாங்கம் ஏற்கனவே கண்காணிப்பு விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.