Home உலகம் பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மில்லியனர்கள் : வெளியான காரணம்

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மில்லியனர்கள் : வெளியான காரணம்

0

லேபர் கட்சியின் ஆட்சியில் பிரித்தானியாவை (United Kingdom) விட்டு மில்லியனர்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சிக்கு வந்த பின் தொழிலாளர் கட்சியின் வரி திட்டங்களால் மில்லியனர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியான அறிக்கையில், கடந்த ஆண்டு பிரித்தானியா 10,800 மில்லியனர்களை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியேறும் மில்லியனர்கள்

இது 2023-இன் எண்ணிக்கையிலிருந்து 157% அதிகரிப்பை காட்டுவதுடன் இதனால், சீனாவிற்கு (China) பிறகு உலகின் மிகுந்த மில்லியனர்களை இழந்த நாடாக பிரித்தானியா கொணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மில்லியனர்கள் இத்தாலி (Italy), சுவிட்சர்லாந்து (Switzerland) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version