Home உலகம் பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் இந்திய பிரதமர்

பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் இந்திய பிரதமர்

0

புதிய இணைப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை திறந்து வைத்துள்ளார்.

இதன்போது ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) தொடருந்து சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

பாம்பன் புதிய பாலத்தை கொடியசைத்து திறந்து வைத்ததைத் தொடர்ந்து, ராமநாத சுவாமி கோயிலில் நரேந்திர மோடி வழிபாடுகளில் ஈடுபட்டார்.

முதலாம் இணைப்பு

இராமேஸ்வரம் பயணமாகிறார் மோடி…! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை திறந்து வைப்பதற்காக இன்று தமிழகம் செல்ல உள்ளார். 

இலங்கை (Sri lanka) வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து மண்டபம் செல்கிறார்.

பிரதமரின் வருகையினை முன்னிட்டு குறித்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாம்பன் சாலை பாலம்

மண்டபம் முகாமில் இருந்து இராமேஸ்வரம் வரை சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்திற்கு சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

     

கார் மூலம் பாம்பன் சாலை பாலத்தின் மத்திய பகுதிக்கு சென்று பகல் 12.00 மணியளவில் புதிய பாம்பன் பாலத்தை கொடி அசைத்து திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்திலிருந்து 12.30 மணியளவில் புறப்பட்டு நேராக இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம் செய்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை, இராமேஸ்வரம் – இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும்.

அதுபோல இராமேஸ்வரம் நகரத்திற்குள் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version