Home உலகம் கனடாவில் முதியவர்களை ஏமாற்றி பண மோசடி:இரண்டு தமிழர்கள் கைது

கனடாவில் முதியவர்களை ஏமாற்றி பண மோசடி:இரண்டு தமிழர்கள் கைது

0

கனடாவின் (canada) டர்ஹாம் (durham) பிராந்தியத்தில் பல முதியவர்களை ஏமாற்றி  மோசடி செய்த குற்றச்சாட்டில் இரு தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது, ஒன்ராரியோ-டுறம் பிரதேசத்தில் வசிக்கும் லக்ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக்ஷயா தர்மகுலேந்திரன் (25 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் அதிகரித்த வெப்பத்தின் தாக்கம்! 9 பேர் பலி

கைது நடவடிக்கை 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் (4 )ஆம் திகதி டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பான குற்ற விசாரணையை முடித்து, யார்க் பிராந்திய காவல்துறையின் உதவியுடன் நிதிக் குற்றப்பிரிவினரால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சந்தேக நபர்கள், வங்கி மற்றும் கிரெடிட் அட்டை  நிறுவனங்கள் போல நடித்து தொலைபேசி அழைப்புகளை ஏற்ப்படுத்தி உரியவர்களது கணக்குகள் மோசடி செய்யப்பட்டதாக நம்ப வைத்துள்ளனர்.

உடல் எடையை குறைக்க புதிய வழி : அனுமதி வழங்கியது கனடா

 மோசடியான கொள்முதல்

இதனையடுத்து பாதிக்கப்பட்டவரின் வங்கி அட்டைகள் மற்றும் கடவுச்சொற்களை பெற்றுக் கொள்ள இவர்களால் ஒரு கூரியர் அனுப்பப்பட்டு பெறப்பட்டுள்ளது.

பின்னர் அவை மோசடியான கொள்முதல் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இது போன்ற சம்பவங்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் D/Cst ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனடாவிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியான காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version