Home முக்கியச் செய்திகள் கனடாவில் அகதி நிலை கோரும் அமெரிக்கர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் அகதி நிலை கோரும் அமெரிக்கர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

0

கனடாவில் (Canada) அகதி நிலை கோரும் அமெரிக்கர்கள் (United States) எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதாக கனடாவின் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆணைய தரவுகள் தெரிவிக்கின்றன.

கனடாவில் அகதி நிலை கோருவோரின் மொத்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

அகதி நிலை கோரிய 55,000 பேரில் அமெரிக்கர்கள் எண்ணிக்கை 245 மட்டுமே. மேலும் அமெரிக்காவிலிருந்து வந்து கனடாவில் அகதி நிலை கோருவோரில் ஏற்றுக்கொள்ளப்படுவோர் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

அகதி நிலை கோரும் அமெரிக்கர்கள்

என்றாலும், இந்த ஆண்டின் முதல் பாதியில் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்த அமெரிக்கர்கள் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்த அமெரிக்கர்கள் எண்ணிக்கை இப்போதுதான் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் 204 அமெரிக்கர்கள் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தார்கள்.

ட்ரம்ப் முதல் முறை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

கனடாவில் அகதி நிலை பெறவேண்டுமானால், அகதி நிலை கோரி விண்ணப்பிப்போர் அமெரிக்காவில் எந்த இடத்திலும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கனடாவின் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆணையத்தை நம்பவைக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version