Home உலகம் இஸ்ரேலுக்கு உளவு பார்த்தவரை தூக்கிலிட்டது ஈரான்

இஸ்ரேலுக்கு உளவு பார்த்தவரை தூக்கிலிட்டது ஈரான்

0

இஸ்ரேலிய(israel) புலனாய்வு அமைப்பான மொசாட்டிற்கு உளவு பார்த்தார் என குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை தூக்கிலிட்டதாக ஈரான்(iran) அறிவித்துள்ளது.

ஈரான் நீதித்துறையின் ஊடக மையத்தின் தகவலின்படி, பெட்ராம் மதானி என அடையாளம் காணப்பட்ட நபர், விசாரணை, மேல்முறையீடு மற்றும் ஈரானின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் இறுதி உறுதிப்படுத்தல் உள்ளிட்ட முழு சட்ட செயல்முறைக்குப் பிறகு நேற்று(28) புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் கைது

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட மதானி, மொசாட்டுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், சட்டவிரோத வழிகளில் சொத்து சேர்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவர் உளவுத்துறை நடவடிக்கைகளில் பயிற்சி பெற ஜெர்மனிக்கு பல முறை பயணம் செய்திருந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version