Home உலகம் ஹிஸ்புல்லாவிடம் மோதினால் நாம் தோற்போம்: இஸ்ரேலை எச்சரித்த பாதுகாப்பு அமைச்சர்

ஹிஸ்புல்லாவிடம் மோதினால் நாம் தோற்போம்: இஸ்ரேலை எச்சரித்த பாதுகாப்பு அமைச்சர்

0

லெபனான் (Lebanon) நாட்டில் தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலோ.ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பை இதற்கு மேல் தாக்கினாலோ. இஸ்ரேல் போரில் தோல்வி அடைந்துவிடும் என முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மோசே யாலான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்ரேல் (Israel) ஹிஸ்புல்லா அமைப்பை எதிர்கொள்ள முடியும். அதற்கு வேறு வழிகளை பயன்படுத்த வேண்டும்.

நேருக்கு நேர் போர் 

நேருக்கு நேர் போர் சரிப்பட்டு வராது. நேருக்கு நேர் போர் புரியும் பட்சத்தில் அது நமக்கே எதிராக மாறும். இஸ்ரேல் அந்த போரில் தோல்வி அடைந்துவிடும் இஸ்ரேலிடம் அதற்கான பலமோ சாதகமான சூழலோ இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் – லெபனான் போர் விவகாரம் உச்சம் அடைந்து உள்ளது. இதில் இஸ்ரேல் அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன் லெபனான் உள்ளே ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்று உள்ளது இஸ்ரேலின் எலைட் படிப்பிரிவான Egoz சிறப்புப் படைப் பிரிவு.

பதில் தாக்குதல்

அவர்களை தடுக்கும் விதமாக லெபனான் படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஹிஸ்புல்லாவுடன் நடந்த சண்டையில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் வீரர்களை துப்பாக்கியால் தாக்கியும், கையால் அடித்தும், கையெறி குண்டுகளை வீசியும் ஹிஸ்புல்லா படை வீரர்கள் கொன்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version