Home உலகம் உலகில் உச்சமடையும் வெப்ப அலையின் தாக்கம்: வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை

உலகில் உச்சமடையும் வெப்ப அலையின் தாக்கம்: வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை

0

தற்போது உலகின் பல நாடுகளில் இயல்பை விட அதிக வெப்பம் நிலவி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது புவி வெப்பமடைதலின் விளைவாக இருக்கலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தவகையில், இந்தியா (india), வட அமெரிக்கா, தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வெயிலின் தாக்கம் மிகக் கடுமை

குறிப்பாக, இந்திய வட மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக காணப்படுகின்றது. கடந்த சில வாரங்களாக வட இந்தியாவில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

டெல்லியில் வீடற்ற குடும்பங்கள் தற்காலிகமாக சாலை ஓரங்களில் தங்கி தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அதுபோன்றவர்களை இந்த வெப்ப அலையின் தாக்கம் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 9 நாட்களில் மட்டும் கடும் வெயிலுக்கு 192 பேர் பலியானது ஆய்வில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version