அமெரிக்காவின்(USA) லாஸ் வேகாஸில்(Las Vegas) மர்மமான முறையில் ஒற்றைக்கல் தூண் ஒன்று காணப்பட்டமையானது அங்குள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னார்வ தேடல் மற்றும் மீட்புப் பிரிவின் உறுப்பினர்கள் பாலைவனத்தில் பதிக்கப்பட்டிருந்த அந்த தூணை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளதாக லாஸ் வேகாஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த மர்மத்தூணானது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் தகவல் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர்கள் சமூக ஊடகப்பயனர்கள் இந்த மர்மத்திற்கு விளக்கம் காண வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளனர்.
மர்மத்தூண்
2020 நவம்பர் மாதம் 12 அடி உயரம் கொண்ட மர்மத்தூண் ஒன்று உட்டாவில் உள்ள பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதிலிருந்து உலகின் பல பகுதிகளில் இதுபோன்ற மர்மத்தூண் திடீரென்று காணப்பட்டு வருகிறது.
இந்த விடயத்துடன் தொடர்புடைய
தொடர்புடைய பகுதியானது மக்கள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால், காவல்துறையினர் பொதுமக்கள் நலன் கருதி அந்த மர்மத்தூண் காணப்பட்ட பகுதியை வெளியிட மறுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து ருமேனியா(Romania), மத்திய கலிபோர்னியா(California) ஆகிய பகுதிகளிலும் மர்மத்தூண் திடீரென்று தோன்றியது. தற்போது லாஸ் வேகாஸ் பாலைவனம் அருகே தோன்றியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 அடி உயரம் கொண்ட மர்மத்தூண் ஒன்று தென்கிழக்கு வேல்ஸில் ஒரு மலைப்பகுதியில் தோன்றியமையும் குறிப்பிடத்தக்கது.
MYSTERIOUS MONOLITH!
We see a lot of weird things when people go hiking like not being prepared for the weather, not bringing enough water… but check this out!
Over the weekend, @LVMPDSAR spotted this mysterious monolith near Gass Peak north of the valley. pic.twitter.com/YRsvhJIU5M— LVMPD (@LVMPD) June 17, 2024