Home சினிமா பெரியவரை தள்ளிவிட்ட பாதுகாவலர்.. கண்டுகொள்ளாமல் சென்ற நாகர்ஜுனா, தனுஷ்! – அதிர்ச்சி வீடியோ

பெரியவரை தள்ளிவிட்ட பாதுகாவலர்.. கண்டுகொள்ளாமல் சென்ற நாகர்ஜுனா, தனுஷ்! – அதிர்ச்சி வீடியோ

0

நடிகர் தனுஷ் தற்போது குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் அந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் நடிக்கிறார்.

அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக நாகார்ஜூனா, தனுஷ் மற்றும் அவரது மகன் ஆகியோர் ஏர்போர்ட் சென்று இருக்கின்றனர்.

தள்ளிவிடப்பட்ட ரசிகர்

நாகர்ஜூனா நடந்து வரும்போது வயதான ரசிகர் ஒருவர் அருகில் வந்துவிடுகிறார். அப்போது பாதுகாவலர் அவரை இழுத்து கீழே தள்ளிவிடுகிறார்.

அதை பார்த்தும் பார்காதது போல நடிகர் நாகார்ஜூனா செல்கிறார். அவர் பின்னால் வரும் தனுஷும் அதை கண்டுகொள்ள்வில்லை.

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் நெட்டிசன்கள் நாகார்ஜூனாவை வறுத்தெடுத்து வருகின்றனர். “நீங்க என்ன கடவுளா” என விளாசி வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version