Home ஏனையவை ஆன்மீகம் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூரான் ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூரான் ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

0

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ
பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும்
நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று(30.07.2024) காலை இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளியம்மை
திருக்கல்யாணப்படிப்புடன் பெருந்திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டுதல் வைபவம்
நடைபெற்றது.

பாரம்பரிய முறை

அதனை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர்
மரபினருக்கு காளாஞ்சியும்,பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கும்
நிகழ்வு இடம்பெற்றது.

நல்லூர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டில் மூலம்
கல்வியங்காட்டில் உள்ள கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு
பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் எடுத்து சென்று
கையளிக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் ஆலய பிரதம சிவாச்சாரியர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 10
மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன் தொடர்ந்து 25 நாட்களுக்கு
மகோற்சவ பெருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version