Home இலங்கை இலங்கையிடம் இருந்து பாடத்தை கற்றுக்கொள்ள விரும்பும் பாகிஸ்தான்

இலங்கையிடம் இருந்து பாடத்தை கற்றுக்கொள்ள விரும்பும் பாகிஸ்தான்

0

Courtesy: Sivaa Mayuri

கடன் நெருக்கடியில் இருந்து நாட்டை ஸ்திரப்படுத்திய இலங்கையின் தலைமையையும் மக்களையும் பாகிஸ்தான் பாராட்டிள்ளது.

அத்துடன், இலங்கையின் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

அரசியல் ஆலோசனைகள்

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் ஏழாவது சுற்று, இன்று(30) இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சில் நிறைவடைந்தது.

2020ஆம் ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட சந்திப்பின் பின்னர், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைகள் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் பாகிஸ்தானின் வெளிவிவகார செயலாளர் முஹம்மட் சிரஸ் சஜ்ஜாத் காசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்டன.

பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, கல்வி, கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு, தூதரக விவகாரங்கள், விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.  

NO COMMENTS

Exit mobile version