Courtesy: Sivaa Mayuri
அமெரிக்காவின் மெம்பிஸ் (Memphis) விலங்கினச்சாலை, இலங்கையில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ஆராய்ச்சி நிலையத்தை இலங்கையில் செயற்பட வைப்பதே மெம்பிஸ் விலங்கினச்சாலையின் இலக்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முயற்சிகள்
எனினும் எதிர்வரும் நவம்பரில் ஒரு முறையான திறப்பு நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையம் உயிரினங்களின் ஆராய்ச்சி, பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஒரு தளத்தை வழங்கும், மேலும் உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்கான ஆதாரமாக செயற்படும் என்று அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் இலங்கை, வெப்பமண்டல காலநிலை மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பு ஆகியவற்றை கொண்டிருப்பதன் காரணமாக, பல்லுயிர் பன்முகத்தன்மையை கொண்டுள்ளது.
இருப்பினும் காடழிப்பு மற்றும் நில மாற்றம் இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை அச்சுறுத்துவதாக மெம்பிஸ் கருதுகிறது.
இந்தநிலையில், இலங்கையின் பல்லுயிர் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் தொடர்பிலேயே மெம்பிஸின் இலங்கை நிலையம் செயற்படவுள்ளது.