Home இலங்கை அரசியல் நாமலுக்கு வந்த சோதனை.. துண்டிக்கப்பட்ட மின்சாரம் – தள்ளாடிய பலர்!

நாமலுக்கு வந்த சோதனை.. துண்டிக்கப்பட்ட மின்சாரம் – தள்ளாடிய பலர்!

0

நேற்றைய தினம், நுகேகொடையில் இடம்பெற்றிருந்த எதிர்கட்சிகளின், அரசாங்கத்திற்கு எதிரான பேரணி அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில், குறித்த பேரணியின் போது, நாமல் ராஜபக்ச உரையாற்றி முடிக்கும் சந்தர்ப்பத்தில் திடீரென அப்பகுதியில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதன்போது, இது அரசாங்கத்தின் சதி என பேரணியில் கலந்து கொண்டிருந்த நாமல் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. 

நுகேகொடையில் முன்னெடுக்கப்பட்டிருந்த பேரணியானது, அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட போவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான 21 விடயங்களை முன்வைக்க இப்பேரணி நடக்கவிருப்பதாகவும் முன்னர் கூறப்பட்டது. 

ஆனால், உண்மையில், நேற்று இடம்பெற்ற இந்த பேரணி அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது என்பதையும் தாண்டி நாமல் ராஜபக்சவின் பரப்புரை கூட்டமாக இடம்பெற்றிருந்தது என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

அதேநேரம், பேரணிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் தானாக வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்ட போதிலும் கலந்து கொண்டிருந்தவர்களின் நடத்தை அதனை மறுக்கும் வகையில் இருந்தது எனலாம். 

இவை உள்ளிட்ட பல விடயங்களை விளக்கமாக கலந்துரையாடும் வகையில் வருகின்றது எமது நாட்டு நடப்புக்கள் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version