Home உலகம் போர் பதற்றத்திற்கு மத்தியில் புடினை சந்தித்துள்ள நரேந்திர மோடி

போர் பதற்றத்திற்கு மத்தியில் புடினை சந்தித்துள்ள நரேந்திர மோடி

0

ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி(Narendra Modi), அதிபர் விளாடிமிர் புடினை(Vladimir Putin) சந்தித்து பேசியுள்ளார்.

இந்தியா-ரஷ்யா இடையிலான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்க 2 நாள் அரசு முறைப்பயணமாக நரேந்திர மோடி இன்று (08) ரஷ்யா சென்றுள்ளார்.

அவருக்கு மாஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யா துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றுள்ளார்.

 22வது உச்சி மாநாடு

இதனை தொடர்ந்து, இன்று இரவு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை அதிபர் மாளிகையான கிரம்ளின் மாளிகையில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், எரிசக்தி, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, பங்கேற்கவுள்ளதுடன் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version