Home உலகம் வைரங்கள் நிறைந்த புதிய கிரகம் : வியப்பில் நாசா ஆராய்ச்சியாளர்கள்

வைரங்கள் நிறைந்த புதிய கிரகம் : வியப்பில் நாசா ஆராய்ச்சியாளர்கள்

0

நாசாவின் ஜேம்ஸ் வெப் (NASA James Webb Telescope) தொலைநோக்கியானது வைரங்கள் நிறைந்த புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது பூமியிலிருந்து 41 ஒளி ஆண்டுகள் தொலைவில் நமது பிரபஞ்சத்தில் 55 கேன்க்ரி இ என்ற சூப்பர்-எர்த் கிரகத்தைக் (55 Cancri e, a super-Earth) கண்டுபிடித்துள்ளது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கோள் பூமியைப் போல ஐந்து மடங்கு பெரியது எனவும் இந்த கிரகத்தில் அற்புதமான ரகசியங்கள் இருக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் 

சுமார் 2,400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன், 55 கேன்க்ரி இ நட்சத்திரத்தைச் சுற்றி வர 17 மணிநேரம் மட்டுமே ஆகும் என நாசா தெரிவித்துள்ளது.

முக்கியமாக, புதிய கிரகத்தில் கணிசமான அளவு வைரங்கள் இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

புதிய பரிமாணங்கள் 

அத்தோடு, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்தின் நிறை, மூன்றில் ஒரு பங்கு வைரங்களால் ஆனது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கிரகத்தில் வைரம் போன்ற கார்பன் சார்ந்த கட்டுமானங்கள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனை பற்றிய ஆராய்ச்சியை தொடரும் போது இந்த ரகசியங்களுக்கான புதிய பரிமாணங்கள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version