Home உலகம் இஸ்ரேலின் மொசாட்டை இலக்கு வைக்கும் ஹிஸ்புல்லா…! போரின் அடுத்த நகர்வு

இஸ்ரேலின் மொசாட்டை இலக்கு வைக்கும் ஹிஸ்புல்லா…! போரின் அடுத்த நகர்வு

0

ஹிஸ்புல்லா தளபதியின் படுகொலைக்கு இஸ்ரேலிய புலனாய்வு பிரிவினரே பொறுப்பானவர்கள் என அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா (Hassan Nasrallah) குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த மாதம் பெய்ரூட்டில் வைத்து ஹெஸ்பல்லாவின் உயர்மட்ட தளபதி புவாட் ஷுக்ர் (Fuad Shukr) கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் முகமாக நேற்று (25) இஸ்ரேலை (israel) நோக்கி 320க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினர்கள்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மொசாட் (Mossad) மற்றும் “யூனிட் 8200“ (Unit 8200) ஆகிய இஸ்ரேலிய புலனாய்வு பிரிவினர்கள் காணப்படும் டெல் அவிவ் (Tel Aviv) அருகே உள்ள க்ளிலோட் (Glilot) தளம் தான் தமது தாக்குதலின் பிரதான நோக்கமாக இருந்தாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், க்ளிலோட் மீதான தாக்குதல் வெற்றியளிக்கவில்லை என்று இஸ்ரேலிய தரப்பினர் கூறுகின்ற போதிலும் தமது தாக்குதல் திட்டமிட்டபடி நிறைவேற்றப்பட்டதாக நஸ்ரல்லா உறுதிபட கூறியுள்ளதுடன், இதனால் ஏற்பட்ட சேதத்தின் உண்மையான அளவை இஸ்ரேல் மறைத்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர்

மேலும், “ காஸாவில் போர் நிறுத்தத்தத்தினை கொண்டுவருவதே எங்களின் பிரதான நோக்கமாக காணப்பட்டது. எனவே, பேச்சுவார்த்தைகளுக்கு கால அவகாசம் வழங்குவதற்காக தாக்குதல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) மற்றும் அமெரிக்கா (USA) போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கும் நோக்கில் புதிய நிபந்தனைகளை விதிக்கின்றனர்” எனவும் விமர்சித்துள்ளார்.

ஆகையால், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமின்மை மற்றும் நேர்மையற்ற தன்மையால் விரக்தியடைந்த நஸ்ரல்லாவும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலுக்கு எதிரான தங்களது தாக்குதலை தாமதிக்காமல் விரைவு படுத்தியது என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version