2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப் பட்டியல் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட நாமல் ராஜபக்சவும் (Namal Rajapaksa) அப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில், பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
தேசியப் பட்டியல்
அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa ) , முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ச, பஷில் ராஜபக்ச (Basil Rajapaksa) ஆகியோர் போட்டியிடவோ தேசியப் பட்டியலில் இடம்பெறவோ மாட்டார்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் (Geethanath Cassilingham), சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் உள்ளிட்டோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ச படுதோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.