Home உலகம் வெளிநாடொன்றில் விமானத்தில் பறவை மோதியதால் பதற்றம்

வெளிநாடொன்றில் விமானத்தில் பறவை மோதியதால் பதற்றம்

0

நேபாளத்தில் தரையிறங்கும் போது விமானத்தின் மீது பறவை மோதியதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து போகாராவுக்கு புத்தா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், பிற்பகல் 3.45 மணிக்கு போகாரா சர்வதேச விமான நிலையத்தில் விமனாம் தரையிறங்கும் போது பறவை அதன்மீது மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான வட்டாரங்கள்

குறித்த விடயத்தை விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவத்திற்குப் பிறகு, விமானத்தில் தொழில்நுட்பக் குழு பாதுகாப்பு சோதனை மேற்கொண்ட நிலையில் அதில் உந்துவிசை பிளேடு சிறிது சேதமடைந்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதனால் போகாரா சர்வதேச விமான நிலையத்தில் சிறிது பதற்றமான சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version