Home உலகம் நேபாளத்தில் தப்பியோடிய 15ஆயிரம் கைதிகள் :ஒருவர் மட்டும் சரணடைந்த விநோதம்

நேபாளத்தில் தப்பியோடிய 15ஆயிரம் கைதிகள் :ஒருவர் மட்டும் சரணடைந்த விநோதம்

0

நேபாளத்தில் அரசுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கைளை அடுத்து
நாட்டில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர்.

இதில் நேபாளத்தின் தொலைதூர வடக்கு மாகாணமான கைலாலியின் தலைநகர் தங்காடியில் உள்ள சிறையும் உடைக்கப்பட்டு கைதிகள் தப்பி ஓடினர். இந்த சிறையில் இருந்து சுமார் 692 சிறைக்கைதிகள் தப்பி ஓடினர். தப்பித்துச் சென்ற ஒருசில நாட்களில் ஒரேயொரு கைதி மட்டும் மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளார்.

தண்டனைக்காலம் அதிகரிக்கப்படலாம் என்ற அச்சம்

அடுத்த அரசு அமைக்கப்பட்ட பிறகு, தண்டனைக் காலம் இரண்டு மடங்காக அறிவிக்கப்படலாம் என்ற அச்சத்தில் திரும்பி வந்ததாக தெரிவித்துள்ளார். தன்னுடைய தவறு எனக்கூறி சிறையில் சரணடைந்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அவரது அடையாளத்தை வெளியிடவில்லை.

காவல்துறை மீண்டும் அவரை கைது, சிறையை உடைத்து தப்பிச் சென்றதாக புதிய குற்றாட்டுக்கு ஆளானால், தண்டனை மேலும் அதிகமாகவும் என்பதை உணர்ந்து சரணடைந்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version