Home உலகம் காசா அமைதி முயற்சியில் திடீர் திருப்புமுனை

காசா அமைதி முயற்சியில் திடீர் திருப்புமுனை

0

காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஒப்புக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த திட்டத்தை முன்மொழிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், காசா பகுதியில் பிணையக்கைதிகளாக உள்ளவர்களின் குடும்பத்தினரிடம் நெதன்யாகு தனது ஒப்புதலை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பலஸ்தீனிய போராளி

பலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ், முன்னதாக இந்த திட்டத்தைப் பெற்றுள்ளதாகவும் அதை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்திருந்த நிலையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலால் ஆதரிக்கப்படும் இந்த அமெரிக்கத் திட்டத்தின் சாத்தியமான ஏற்றுக்கொள்ளல், அப்பகுதியில் விரோதப் போக்கை நிறுத்துவதற்கும், பிணையக் கைதிகளை விடுவிப்பதற்கும் நடந்து வரும் முயற்சிகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version