Home உலகம் தொடரும் போர்நிறுத்தப் பேச்சு வார்த்தைகள்: நெதன்யாகுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பைடன்

தொடரும் போர்நிறுத்தப் பேச்சு வார்த்தைகள்: நெதன்யாகுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பைடன்

0

காசா (Gaza) பகுதியில், போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் (Joe Biden) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கும் (Netanyahu) இடையில் கலந்துரையடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த வார இறுதியில், போர் நிறுத்த பேச்சு வார்தைகளுக்காக எகிப்தின் கெய்ரோவில் கட்சிகள் மீண்டும் கூடவிருக்கும் நிலையில் குறித்த கலந்துரையாடலானது தொலைபேசி வாயிலாக இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது, முற்றுகையிடப்பட்டுள்ள காசா பகுதியில், போர் நிறுத்தத்தை கொண்டு வரவும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முயற்சிகள்

அத்துடன், ஈரானில் (Iran) இருந்து வரும் அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான அமெரிக்காவின் (USA) முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அண்மையில் போர்நிறுத்த பேச்சு வார்த்தைகள் கத்தாரில் இடம்பெற்றன. எனினும் நெதன்யாகுவின் புதிய நிபந்தனைகளுடன் குறித்த ஒப்பந்தம் ஒத்துப்போகிறது என்று ஹமாஸ் அந்த முன்மொழிவை நிராகரித்துள்ளது,

பல மாதங்களாக, அமெரிக்கா, கத்தார் (Qatar) மற்றும் எகிப்து (Egypt) ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் மற்றும் போர்நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவுக்குள் நுழைய அனுமதிக்கும் உடன்பாட்டை எட்ட முயற்சி செய்து வருகின்றன.

ஆனால், போரை நிறுத்துவதற்கான ஹமாஸின் கோரிக்கைகளை நெதன்யாகு நிறைவேற்ற மறுத்ததால் மத்தியஸ்தர்களின் முயற்சிகள் முடங்கியுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version