Home உலகம் சைக்கிளில் சென்ற நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர்: வைரலாகும் காணொளி

சைக்கிளில் சென்ற நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர்: வைரலாகும் காணொளி

0

நெதர்லாந்தில்(Netherlands)கடந்த 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்த மார்க் ரூட்(Mark Rutte) எளிமையாக சைக்கிளில் சென்றது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வலதுசாரி ஆதரவாளரான மார்க் ரூட் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நேட்டோ பொதுச் செயலாளராகப் பதவியேற்கவுள்ளார்.

இவர் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து அடுத்த நெதர்லாந்து பிரதமராக டிக் ஸ்கூப் தேர்வு செய்யப்பட்டார்.

வெளியேறிய விதம்

அவருக்கு, அந்த நாட்டு மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

தி ஹேக் நகரில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில், அவருடன் மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட மார்க் ரூட், அனைவருக்கும் நன்றி தெரிவித்தபடி பிரதமர் அலுவலகத்தைவிட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறிய விதமே தற்போது பேசுபொருளாகியுள்ளது, அதாவது அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு சைக்கிளில் ஏறி சென்றுள்ளார்.

இந்த காணொளியானது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version