Home உலகம் Blue விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள முக்கிய நாடு : வெளியான மகிழ்ச்சி தகவல்

Blue விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள முக்கிய நாடு : வெளியான மகிழ்ச்சி தகவல்

0

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக புதிய Blue Visa திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகம் பத்து ஆண்டுகள் செல்லுபடியாகும் Blue Visa திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விசா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை மேம்பாட்டில் முக்கிய பங்கு வகித்தவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நிபுணர்கள்

முதற்கட்டத்தில், 20 சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் புதுமையாளர்களுக்கு இந்த விசா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய விருது பெற்றவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவன உறுப்பினர்கள் இதற்கு தகுதி பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் தங்கள் சாதனைகள் மற்றும் சுற்றுச்சூழல் முயற்சிகளை ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version