Home இலங்கை அரசியல் கெஹலிய மீது புதிய முறைப்பாடு

கெஹலிய மீது புதிய முறைப்பாடு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) அமைச்சராக இருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதாக அவர் மீது நபர் ஒருவரால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சினால் அவருக்கு 2 உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும், அமைச்சர் பதவியை இழந்ததன் பின்னர் வாகனங்களை மீள ஒப்படைக்காமல் முறைகேடாக பயன்படுத்தியதாக கெஹலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விசாரணைகள் ஆரம்பம்

இந்நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/new-case-against-kehaliya-1718799255

NO COMMENTS

Exit mobile version