Home உலகம் அமெரிக்கா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கான முக்கிய தகவல்

அமெரிக்கா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கான முக்கிய தகவல்

0

அமெரிக்காவிற்கு(US) பயணிக்க விரும்பும் கனேடியர்களுக்கான வழிகாட்டுதலை கனடா(Canada) புதுப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சில கொள்கைகள் காரணமாக இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 11ஆம் திகதி முதல், அமெரிக்காவில் 30 நாட்களுக்கும் அதிகமாக தங்கவிருக்கும் கனேடியர்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரம்பின் உத்தரவு

இதனை செய்யப்படவில்லை என்றால் அபராதம், தண்டனை, அல்லது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளதாக கனடாவின் சுற்றுலா அறிவிப்பு குறிப்பிடுகின்றது.

இதற்கு முன்னர் இந்த விதி நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுடன் “Protecting the American People Against Invasion” (அமெரிக்க மக்களை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கும் ஆணை) என்ற ட்ரம்பின் உத்தரவை முன்னிட்டு இதை அமெரிக்க அரசு கடுமையாக செயல்படுத்தியுள்ளது.

மேலும், அமெரிக்க எல்லையில் விசா மற்றும் ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகளால் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கனடா – அமெரிக்கா வர்த்தக மோதல்

அதேசமயம், கடவுச்சீட்டில் பிறக்கும்போது பதிவுசெய்யப்பட்ட பாலின தகவல் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ட்ரம்பின் உத்தரவால் Transgender மற்றும் Bisexual சேர்ந்த நபர்கள் அமெரிக்கா பயணிக்க முன்வைக்கப்பட்டுள்ள தடைகள் குறித்து ஐரோப்பிய நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேலும், கனடா – அமெரிக்கா இடையே வர்த்தக மோதலும், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற ட்ரம்பின் கருத்தும் இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version