Home இலங்கை அரசியல் 10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிப் பிரமாணம்

10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிப் பிரமாணம்

0

10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பொலன்னறுவை மாவட்ட எம்.பி ஜகத் விக்கிரமரத்ன (Jagath Wickramaratne) சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (Rizvi Sally) தலைமையில் இன்றைய (17.12.2024) நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

புதிய சபாநாயகராக, ஜகத் விக்ரமரத்னவின் பெயரை பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்மொழிந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 

வர்த்தமானி அறிவித்தல்

இதேவேளை, அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ்.குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, அசோக ரன்வல, டிசம்பர் 13ஆம் திகதி முதல் தனது பதவியை பதவி விலகல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/G6Fff_fyH6o

NO COMMENTS

Exit mobile version