Home உலகம் உருகி வழியும் கார்கள் – மீண்டும் பற்றி எரியும் லொஸ் ஏஞ்சல்ஸ்: 31000 போர் வெளியேற்றம்

உருகி வழியும் கார்கள் – மீண்டும் பற்றி எரியும் லொஸ் ஏஞ்சல்ஸ்: 31000 போர் வெளியேற்றம்

0

அமெரிக்காவின் (USA) லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத் தீ பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ வேகமாகப் பரவுவதால் 31 ஆயிரம் பேரை பாதுகாப்பாக வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

காற்று பலமாக வீசுவதால் அந்தப் பகுதி முழுவதும் அடர்த்தியான புகையும் தணலும் நிரம்பியுள்ளது. அது மேலும் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது. தற்போது, மீண்டும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கே வடக்கே, காட்டுத்தீ பரவ துவங்கி உள்ளது.

இதனால், பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சில மணி நேரத்தில் 8,000 ஏக்கருக்கும் (3,200 ஹெக்டேர்) அதிகமான பரப்பளவுக்கு தீ வேகமாக பரவியது. காட்டுத்தீ பரவ துவங்கியதால், 31 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

வீடு தீயில் கருகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையுடன் மக்கள் அங்கிருந்து வெளியேற தயாராவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் நீரைத் தெளிக்கும் உலங்குவானுர்திகளும் விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version