Home உலகம் இம் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ள வெளிநாடு!

இம் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ள வெளிநாடு!

0

இந்த மாதம் 1ஆம் திகதி நடைமுறையாகும் வகையில், நியூசிலாந்து (New zealand) அரசு, அனைத்து வகை விசா கட்டணங்களிலும் 60 சதவீதம் உயர்வை அறிவித்துள்ளது.

குறிப்பாக, வேலை, கல்வி மற்றும் சுற்றுலா விசாக்களை விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்கள் மீது இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த மாற்றம், குடியுரிமை அமைப்பை மக்களின் வரியிலிருந்து, விண்ணப்பதாரர்களின் கட்டணங்களால் சுயமாகப் பொறுப்பேற்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுற்றுலா விசா கட்டணங்கள்

குடியேற்றத் துறை அமைச்சர் எரிக்கா ஸ்டான்ஃபோர்ட் இதன் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார்.

“குடியேற்ற முறைமையை திறமையாகவும் தற்காலிகமாகவும் மாற்றுவதே இதன் நோக்கம்,” என்றும் அவர் கூறினார்.

இந்த மாற்றங்கள், மக்கள் நிதியின் சார்பை குறைத்து, நான்கு ஆண்டுகளில் $563 மில்லியனுக்கு மேல் சேமிப்பைக் கொண்டுவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி விசா கட்டணம் $188 இருந்தது $300க்கு அதிகரிக்கிறது. சுற்றுலா விசா கட்டணங்கள் $119 இருந்து $188 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும் நியூசிலாந்தின் விசா கட்டணங்கள் இன்னும் அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் கட்டணங்களைவிட குறைவாகவே உள்ளதாக ஸ்டான்ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு

2023 இல், நியூசிலாந்து இந்திய நாட்டினருக்கான 115,008 விசாக்களை அங்கீகரித்துள்ளது, இது 2019 இல் 83,583 இல் இருந்து அதிகரித்துள்ளது.

மேலும், 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான தகுதித் தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், ஆங்கில மொழி திறன், வேலை அனுபவம் மற்றும் திறமைகளை அடிப்படையாகக் கொண்ட புதிதான வழிகாட்டுதல்களை உருவாக்கி, குடியேற்றத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version