Home உலகம் நித்யானந்தா உயிரிழப்பா : வைரலான விடயங்களுக்கு முற்றுபுள்ளி

நித்யானந்தா உயிரிழப்பா : வைரலான விடயங்களுக்கு முற்றுபுள்ளி

0

நித்யானந்தா (Nithyananda) உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்கள் உட்பட வெளிநாட்டு ஊடகங்கள் வரையில் செய்தி வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

இந்தநிலையில், இன்று (02) இரவு அவர் நேரலையில் தோன்றுவார் என கைலாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தி வரும் இவர் மீது பலதரப்பட்ட முறைப்பாடுகள் அடுத்தடுத்தடுத்தாக எழுந்தமையினால் அவர் மிகவும் தேடப்பட்ட நபரானார்.

அரசு மோசடி 

இதையடுத்து, இந்தியாவிலிருந்து தலைமறைவாகி, ஒரு தீவையே உருவாக்கி அந்தத் தீவுக்கு கைலாசா என்று பெயர் வைத்தார்.

இது ஒரு இந்துக்களுக்கான நாடு என்றும், தனி கரன்சி, தனி கடவுச்சீட்டு, தனி கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்து தொழில் தொடங்க வருமாறு தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஐந்து ஆண்டுகளாகவே அவர் டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

இருப்பினும், அவை மறுக்கப்பட்டதையடுத்து, அண்மையில் பொலிவியா நாட்டில் நில ஒப்பந்த விவகாரத்தில் அந்நாட்டு அரசு மோசடி குற்றச்சாட்டு சுமத்தியதுடன் நித்யானந்தாவின் பல பிரதிநிதிகளை நாட்டை விட்டும் வெளியேற்றியது.

தொடர்பிலான சர்ச்சைகள்

இவ்வாறு, நித்தியானந்தா தொடர்பிலான சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில் உடல் நலக்குறைவால் நித்யானந்தா மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் நித்தியானந்தாவின் உறவினர் ஒருவர் வெளியிட்ட காணொளி வைரலாகிய நிலையில், இதுகுறித்து முகநூலில் விளக்கம் அளித்த கைலாசா அவர் உயிருடன் இருப்பதாக தகவல் தெரிவித்தது.

கைலாசா தரப்பு வெளியிட்டுள்ள முகநூல் பதிவு மூலமாக, நித்யானந்தாவின் உடல்நிலை குறித்து பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (02) மாலை ஏழு மணி அளவில் நித்யானந்தா நேரலையில் தோன்றுவார் என அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version