Home உலகம் ஹிஸ்புல்லாவிற்கு பேரிடி: இஸ்ரேலின் அறிவிப்பால் நீடிக்கும் பதற்றம்

ஹிஸ்புல்லாவிற்கு பேரிடி: இஸ்ரேலின் அறிவிப்பால் நீடிக்கும் பதற்றம்

0

இஸ்ரேலின் புதிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz), போரின் இலக்குகளை அடையும் வரை லெபனானில் (Lebanon) ஹிஸ்புல்லாக்களுடன் போர் நிறுத்தம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டிருந்த கட்ஸ், “வெற்றியின் பலனை உணரும் வகையில் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர வேண்டும்“ என குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, “லெபனானில் போர்நிறுத்தம் இருக்காது, ஓய்வும் இருக்காது” என்று அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

 

அமெரிக்காவின் பங்களிப்பு

இந்த நிலையில், திங்களன்று இஸ்ரேலிய தலைவர்கள் லெபனானில் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாரம் வெளியுறவு அமைச்சகத்தில் காட்ஸுக்கு பதிலாக வெளியுறவு மந்திரி கிடியோன் சார், இஸ்ரேல் இந்த பிரச்சினையில் அமெரிக்காவுடன் செயல்படுவதாகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் பிற்பகுதியில் இருந்து லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் அதன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லா தாக்குதல் 

இதேவேளை, தீவிர வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு செப்டம்பர் 30 அன்று தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், ஒக்டொபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

எனினும், இஸ்ரேலுடனான மோதலில் பெரும் தலைவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டு பேரிழப்புக்களை ஹிஸ்புல்லாக்கள் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version