Home முக்கியச் செய்திகள் தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை மீதான விவாதம் குறித்து வெளியான தகவல்

தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை மீதான விவாதம் குறித்து வெளியான தகவல்

0

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) அப்பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான விவாதம் சித்திரை புதுவருடத்தின் பின்னர் இடம்பெறும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை மற்றும் அவரை பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் குழுவை நியமிக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் 113 வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும்.

மூவரடங்கிய விசாரணை குழு 

பிரதம நீதியரசர் நியமித்த நீதிபதி, தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இருவரின் இணக்கப்பாட்டின் பேரில் நியமிக்கப்பட்ட பிரதிநிதியும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அத்துடன், எதிர்வரும் 8ஆம் திகதி மூவரடங்கிய விசாரணை குழு நியமிக்கப்பட்டதன் பின்னர், தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறிது காலம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், மேற்படி குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like this,

https://www.youtube.com/embed/jEUxgHA9iuc

NO COMMENTS

Exit mobile version