இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்து கவலைகளை எழுப்ப எந்த காரணமும் இல்லை
என்று ரஷ்யா கூறியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் பரஸ்பர மரியாதைக்குரிய ஒத்துழைப்பைக்
கட்டியெழுப்ப இலங்கை அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இலங்கை குறித்த ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைக்கு பதிலளிக்கும்
விதமாக, ரஷ்யா இந்தக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளது.
புதிய தேசிய கொள்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர், இலங்கைக்கு அண்மையில் வந்து
சென்றமை, இதற்கான தெளிவான உதாரணம் என்றும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கடமைகளுக்கு ஏற்ப இலங்கையின் தேசிய சட்டம்
மாற்றியமைக்கப்படுவதை முயற்சிகளை ரஷ்யா அவதானித்து வருகிறது.
பொது நிர்வாக அமைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய நல்லிணக்கத்தை நோக்கி முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்த சூழலில், இந்த பகுதியில் ஒரு புதிய தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை
உருவாக்கத் தொடங்க ஓகஸ்ட் 2025 இல் நாட்டின் அரசாங்கம் எடுத்த முடிவை தமது
நாடு வரவேற்பதாக ரஸ்யா குறிப்பிட்டுள்ளது.
விசாரணை
இலங்கையில் சிறப்புப் பணியகங்கள் செயல்படுகின்றன, அதே போல் மனித உரிமைகள்
மீறல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணையகமும் செயல்படுகின்றது.
இந்தப் பின்னணியில், முன்னர் இடம்பெற்ற மனித உரிமைகள் சாக்குப்போக்குகளின்
கீழ் தற்போதைய இறையாண்மை கொண்ட அரசின் மீது அரசியல் அழுத்தத்தை
செலுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் கவலைக்குரியவை என்று ரஷ்யாவுக்கான
மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில்தான், இலங்கை அதிகாரிகளால் ஆதரிக்கப்படாத மனித உரிமைகள் மீறல்கள்
குறித்த தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்ய ஐக்கிய நாடுகள் பேரவைக்கு
அதிகாரம் அளிக்கும் தீர்மானம், உலகளாவிய கொள்கைகளுக்கு முரணானது என்று ரஷ்ய
பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
