Home உலகம் அறிமுகமானது ஐபோன் 17: ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

அறிமுகமானது ஐபோன் 17: ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

0

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை தொலைபேசி சந்தைகளுக்கு அறிமுகமாகியுள்ளது.

இவற்றின் அறிமுக நிகழ்ச்சி நேற்று (09) அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய தொலைபேசிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆப்பிள் வாட்ச்

இவற்றுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் எஸ் இ 13 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 ஆகிய ஸ்மார்ட் கைக் கடிகாரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்திய நேரப்படி நேற்று (செப். 9) இரவு 10.30 மணி முதல் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது.

ஆப்பிள் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் இந்தநிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது.

ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 12ஆம் திகதி மாலை 5.30 மணி (இந்திய நேரம்) முதல் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் விநியோகம் தொடங்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version