Home உலகம் இரக்கத்திற்கு இடமில்லை – அடுத்தடுத்து வரும் எச்சரிக்கை : கேள்விக்குறியாகும் நிமிடங்கள்

இரக்கத்திற்கு இடமில்லை – அடுத்தடுத்து வரும் எச்சரிக்கை : கேள்விக்குறியாகும் நிமிடங்கள்

0

இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் அதிகரித்துள்ள நிலையில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

“இனி யூதர்களுக்கு இரக்கம் காட்ட முடியாது, அந்த தீவிரவாத பிராந்தியத்துக்கு எதிராக நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை”என்று தனது எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர்

ஏற்கெனவே இந்த எச்சரிக்கையை ஆங்கிலம் மற்றும் பார்ஸி மொழியில் வெளியிட்ட ஈரானின் உச்ச தலைவர் தற்போது அதனை ஹீப்ரூ மொழியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய உச்ச தலைவருக்கு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே அவர் பதிலுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஈரானின் ஆட்சியை மாற்றுவதே தற்போதைய போர் நடவடிக்கையின் விளைவாக இருக்கலாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்று அவர் கருத்து தெரிவித்த அவர், “நான் இதைப் வரலாற்று பார்வையில் பார்க்கிறேன். சைரஸ் யூதர்களை விடுவித்தார். இன்று யூத அரசு பாரசீகர்களை விடுவிக்கலாம். என குறிப்பிட்டுள்ளார். 


you may like this


https://www.youtube.com/embed/mUNVHVN8Ciw

NO COMMENTS

Exit mobile version