Home உலகம் ட்ரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டியதற்கு இதுவே காரணம்..!

ட்ரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டியதற்கு இதுவே காரணம்..!

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகத்தில் பல மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட வேண்டும் என
வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

ட்ரம்பின் தலையீட்டால் இந்தியா–பாகிஸ்தான், இஸ்ரேல்–ஈரான், தாய்லாந்து–கம்போடியா, ருவாண்டா–காங்கோ, செர்பியா–கொசாவோ, எகிப்து–எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான மோதல்கள் சமாதானமாக முடிந்துள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ட்ரம்பை பரிந்துரைத்துள்ள பிரதிநிதிகள்

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப் தனது ஆறு மாத பதவிக் காலத்தில் சராசரியாக மாதத்திற்கு ஒரு சமாதான ஒப்பந்தம் அல்லது போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதற்கான நேரம் இது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அமெரிக்க பிரதிநிதி பட்டி கார்டர் உள்ளிட்டோரும் ட்ரம்பின் பெயரை நோபல் பரிசுக்கு முன்னதாக பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version