Home உலகம் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

0

2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டாரன் அசெமேக்லு (Darren Acemeglu), ஜேம்ஸ் ராபின்சன் (James Robinson), சைமன் ஜான்சன் (Simon Johnson) ஆகிய மூன்று பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். மருத்துவம், இயற்பியல், வேதியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

நோபல் பரிசு 

இந்தாண்டு மருத்துத்திற்கான நோபல் பரிசு கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டதை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை வடிவமைப்பதில் அமைப்புகளின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் கொண்ட நாடுகள்

பலவீனமான சட்டம் மற்றும் சுரண்டல் அதிகம் கொண்ட நாடுகள் பெரியளவில் வளர்ச்சியை அடையாது என்பதை அவர்களின் ஆய்வு நிரூபித்துள்ளது.

ஒரு அமைப்பு எப்படி உருவாகின்றன.

அவை எப்படி ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு காரணமாக இருக்கிறது. நிலையான வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் ஆகிவை குறித்து இவர்கள் விரிவான ஆய்வுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version