Home உலகம் பிரித்தானியாவில் வேகமாக பரவும் வைரஸ் தொற்று..! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பிரித்தானியாவில் வேகமாக பரவும் வைரஸ் தொற்று..! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

0

பிரித்தானியாவில்(UK) தற்போது நோரோவைரஸ் (Norovirus)எனும் கடுமையான குளிர்கால தொற்று வேகமாக பரவி வருவதாக NHS(National Health Service)எச்சரித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டன் டூட்டிங் பகுதியில் உள்ள புனித ஜோர்ஜ் மருத்துவமனையில், இந்த தொற்று காரணமாக மூன்று நோயாளர் விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோரோவைரஸ் தொற்றானது மலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் மூலம் பரவுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நிபுணர்களின் எச்சரிக்கை

அத்துடன், கை கழுவாமல் உணவுகளை தொட்டாலோ, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தாலோ இத்தொற்று பரவக்கூடும் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, குறித்த தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version