க.பொ.த சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று(18) அறிவித்துள்ளது.
இம்முறை சாதாரண தர பரீட்சையை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் மார்ச் 26ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ.அமித் ஜயசுந்தர(H.J.M.C.Amit Jayasundara) தெரிவித்துள்ளார்.
சாதாரண தர பரீட்சை
பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ்காணும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளின் ஊடாக தொடர்பு கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொலைபேசி எண்கள் – 1911, 0112784208, 0112784537, 0112786616
தொலைநகல் எண் – 0112784422
பொதுவான தொலைபேசி இலக்கங்கள் – 0112786200, 0112784201, 0112785202
மின்னஞ்சல் – gceolexamsl@gmail.com