Home இலங்கை அரசியல் ஜே.வி.பி அரசாங்கம் பிழையான பாதையில் பயணிக்கின்றது

ஜே.வி.பி அரசாங்கம் பிழையான பாதையில் பயணிக்கின்றது

0

ஜே.வி.பி அரசாங்கம் பிழையான பாதையில் பயணிப்பதாக பிரபல நடிகர் ஜெஹான் அப்புஹாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் கம்பஹா யக்கல பகுதியில் முன்னிலை சோசலிச கட்சியின் காரியாலயம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டனம் வெளியிட்டு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தக் காணொளியில் அவர் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கடுயைமாக சாடியுள்ளார்.

முன்னிலை சோசலிச கட்சியின் யக்கல காரியாலயத்தை ஜே.வி.பி குண்டர்களே தாக்கினர் என அவர் தெரிவித்துள்ளார்.

பாரியளவு மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட இந்த அரசாங்கம் தேவையில்லாத விடயங்களில் தலையீடு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்வளவு இழிநிலைக்கு தள்ளப்படும் என தாம் நினைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் வழியில் பயணம் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் எதிர்ப்பை வெளியிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் பயணம் இதுவென்றால் நீண்ட காலம் பயணம் செய்ய முடியாது என ஜெஹான் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

அரகலய போராட்டம் இடம்பெற்ற போது சிலுவை ஒன்றை சுமந்து நீண்ட தூரம் பயணம் செய்து அப்போதைய அரசாங்கத்திற்கு ஜெஹான் தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version