2024 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியும் டொனால்ட் டிரம்பிற்கு பணத்தின் மீது மாத்திரமே அக்கறை என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது, ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் அவருக்கு எதிராக களம் இறங்கி உள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரசார நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதித் தேர்தல்
எனினும், இதுவரை நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் கமலா ஹாரிஸ் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப்பை, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கமலா ஹாரிஸ் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருக்கு நாட்டு மக்களின் நிலை நன்கு தெரியும்.
அவருக்கு எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களியுங்கள்.
டிரம்பிற்கு அகந்தை மற்றும் பணத்தின் மீது தான் அதீத அக்கறை, நாட்டு மக்களை அவர் நினைத்து பார்த்தது கிடையாது.
மேலும் தன்னை பற்றி மட்டுமே டிரம்ப்க்கு கவலை.
தான் வெற்றி பெறுவதற்காக டிரம்ப், அமெரிக்க அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறார்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.