Home உலகம் வட கடலில் எண்ணெய் டேங்கர் – சரக்குக் கப்பல் பாரிய மோதல் : 32 பேர்...

வட கடலில் எண்ணெய் டேங்கர் – சரக்குக் கப்பல் பாரிய மோதல் : 32 பேர் பலி

0

வட கடலில் எண்ணெய் டேங்கர் மற்றும் சரக்குக் கப்பல் மோதி பாரிய விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (10) கிழக்கு யார்க்ஷயர் கடற்கரைக்கு அருகே நிகழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், போர்த்துகீசிய கொடி ஏந்திய சோலாங் (Solong)என்ற கொள்கலன் கப்பலும், அமெரிக்க கொடி ஏந்திய ஸ்டெனா இம்மாகுலேட்( Stena Immaculate) என்ற டேங்கர் கப்பலுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தலைமை நிர்வாகி

விபத்தில், இதுவரை 32 பேர் உயிரிழந்து இருப்பதாக கிரிம்ஸ்பி கிழக்கு துறைமுகத்தின் தலைமை நிர்வாகி தகவல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் கடலோர காவல்படை (HM Coastguard) உடனடியாக மீட்பு பணிகளைத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

பல நபர்கள்

ராயல் தேசிய லைஃப் போட் நிறுவனம் (RNLI) தகவலின் படி, கப்பல்கள் மோதிய வேகத்தில் பல நபர்கள் கப்பல்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஹம்பர்சைடில் இருந்து கடலோர காவல் படை மீட்பு ஹெலிகாப்டர், ஸ்கெக்னஸ், பிரிட்லிங்டன், மேபிள் தோர்ப் மற்றும் கிளீதோர்ப்ஸ் ஆகிய இடங்களில் இருந்து லைஃப் போட்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version