Home இலங்கை சமூகம் மரம் வெட்ட சென்ற நபருக்கு நேர்ந்த அவலம்

மரம் வெட்ட சென்ற நபருக்கு நேர்ந்த அவலம்

0

நமுனுகுல (Namunukula) கந்தசேன தோட்டப் பகுதியில் வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் ஒன்றில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிங்குருகடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.

நமுனுகுலை கனவல்ல 13 ம் கட்டைப் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய வேலு கருணாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த நபர் தனது காணியில் உள்ள கரப்பன்டைன் மரத்தினால் தனது வீட்டுக்கு ஆபத்தான விளைவுகள் ஏதும் ஏற்படக்கூடும் என எண்ணி சட்டபூர்வமாக அனுமதி பத்திரத்தை பெற்று மரமொன்றை இன்று காலை வெட்டியுள்ளார்.

மரத்தை வெட்டிய போது மரம் சாயும் திசையில் அந்த நபர் நின்றதால் மரத்தின் கிளைகள் இவர் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹிங்குருகடுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Source: https://ibctamil.com/article/one-person-died-in-falling-tree-1721227226

NO COMMENTS

Exit mobile version